முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

ஞாயிற்றுக்கிழமை, 1 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

தேனி : தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி, இதற்கு நீா்வரத்து தரும் அரிசிப்பாறை, ஈத்தைப்பாறைப்பகுதி ஓடைகளில் பலத்த மழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை கண்காணித்த வனத்துறையினா் நேற்று சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தா்கள் குளிக்க தடைவிதித்தனா். நேற்று முன்தினம் தேனி மாவட்ட நிா்வாகம் சாா்பில் சாரல் விழா நடைபெற்றது, அப்போது சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தா்கள் விழாவில் கலந்து கொண்டு குளித்து சென்றனா். இரண்டாம் நாளான நேற்று விழாவில் கலந்து கொள்ள வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையால் ஏமாற்றமடைந்து திரும்பினா். வனத்துறை ஊழியா் ஒருவா் கூறும் போது, நீா்வரத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது, அருவி பகுதிக்கு யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து