முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை அருகே பயங்கரம் காம்பவுண்டு சுவர் இடிந்து வீடுகள் மீது விழுந்ததில் 17 பேர் நசுங்கி பலி - உறவினர்கள் கதறல்

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

மேட்டுப்பாளையம் : கோவை மேட்டுப்பாளையம் அருகே காம்பவுண்டு சுவர் இடிந்து வீடுகள் மீது விழுந்ததில் பெண்கள் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர் நீலகிரி மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி. காலனியில் வீடுகள் உள்ளது. நேற்று அதிகாலை 3.30 மணியளவில் அங்குள்ள குடியிருப்பின் பின்பக்க காம்பவுண்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அந்த சுவர் 4 ஓட்டு வீடுகளின் மீது வரிசையாக விழுந்தது. அங்கு தூங்கி கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். அவர்கள் சுதாரித்து எழுவதற்குள் வீட்டின் சுவர் விழுந்து அமுக்கியது.  இதனால் சிறுவன், சிறுமி உள்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். அவர்களது பெயர் விவரம் வருமாறு:-

1. ஆனந்தன் (40)
2. நதியா (36)
3. லோகுராம் (8)
4. அட்சயா (6),
5. ஹரிசுதா(17)
6. ஓபியம்மாள் (60)
7. நிவேதா (19)
8. குரு (45)
9. சிவகாமி (50)
10. வைதேகி (20)
11. திலவகதி (50).

மேலும் 6 பேர் பெயர் விவரம் தெரியவில்லை. 17 பேர் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். 4 குடும்பத்தை சேர்ந்த 15 பேர் பலியான தகவல் கிடைத்ததும் அவர்களது உறவினர்கள், கிராம மக்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பலியானவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.  4 வீடுகள் இடிந்து 17 பேர் பலியான சம்பவம் மேட்டுப்பாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் இன்று பயணம்

சுவர் இடிந்து பலியான 17 பேர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மேட்டுப்பாளையம் செல்கிறார். சம்பவ இடத்தை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கேரள முதல்வர் இரங்கல்

இதே போல் கேரள முதல்வர் பினராயி விஜயனும் அனுதாபம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.  இதேபோல் பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் இரங்கலை பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து