முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு நாள் சென்னை நினைவிடத்தில் இன்று இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அஞ்சலி - அமைச்சர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் உறுதிமொழி ஏற்பு

புதன்கிழமை, 4 டிசம்பர் 2019      தமிழகம்
cm eps - deput cm ops 2019 09 01

சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி சென்னையில் இன்று 5-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் பிரம்மாண்ட அமைதி பேரணி நடக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடக்கும் இந்த பேரணியை தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்படுகிறது.

தமிழக மக்கள் அனைவரது இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருக்கும் அ.தி.மு.க. நிரந்தரப் பொதுச் செயலாளர்  ஜெயலலிதா கடந்த 5.12.2016 அன்று அமரரானார். அவரது 3-ம் ஆண்டு நினைவு நாளான இன்று (டிசம்பர் 5-ம் தேதி) காலை 10 மணியளவில், சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலையில் இருந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அ.தி.மு.க.வினர் மலர் அஞ்சலி செலுத்துகின்றனர். அதனைத் தொடர்ந்து, நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

இந்த நிகழ்ச்சிகளில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட அ.தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து