ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2019      வர்த்தகம்
reserve bank of india 2019 04 04

மும்பை : வங்கிகளுக்கான குறுகிய காலக்கடன் வட்டி ரெப்போவில் மாற்றம் ஏதுமில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 5 முறை ரிசர்வ் வங்கிக் கூட்டங்களில் வட்டி குறைக்கப்பட்ட நிலையில், இந்த முறை எந்த மாற்றமும் இல்லை என்றும்,  5.15 சதவீதமாகவே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் நிதிக் கொள்கைக் கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. கடந்த 5 முறை நடைபெற்ற நிதிக் கொள்கைக் கூட்டங்களில் வட்டி குறைக்கப்பட்ட நிலையில், நேற்று ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று நிதி கொள்கைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். கடந்த 5 முறையாக நடைபெற்ற கூட்டத்தில் இதுவரை 1.60 சதவீதம் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. மேலும், பொருளாதார வளர்ச்சி ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பின்னடைவு ஏற்பட்டதன் எதிரொலியாக, கடந்த 5 முறையும் வட்டி விகித்ததை குறைத்து குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ரெப்போ விகிதம் 5.15 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 4.90 சதவீதமாகவும் தொடரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜி.டி.பி மதிப்பீட்டு இலக்கு 6.1 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டு இலைகை மேலும் குறைப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார். 2019 - 20ம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்தை விட குறையும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 6.1 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே போல, நடப்பு நிதியாண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் ஏற்கனவே மதிப்பிட்டிருந்ததை விட அதிகரிக்கும் எனவும் தகவல் அளித்துள்ளது. 2019 - 20ம் நிதியாண்டில் 3.5 சதவீதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டு இருந்த பணவீக்க விகிதம் 3.7 சதவீதமாக உயரும் என்று அறிவித்துள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து