தலையில் சிறிய தொப்பிகளுடன் திரிந்த புறாக்களால் அமெரிக்காவில் குழப்பம்

புதன்கிழமை, 11 டிசம்பர் 2019      உலகம்
head cap pigeon in US 2019 12 11

நியூயார்க் : அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் தலையில் சிறிய தொப்பிகளுடன் திரிந்த புறாக்கள் வியப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

உலகைச் சுற்றிலும் எத்தனையோ வினோத சம்பவங்கள் நடந்து வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக எந்த ஒரு சிறிய செயலும் படமாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படுகின்றன.  அவ்வகையில், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகர் பகுதியில் தலையில் சிறிய கவுபாய் தொப்பிகள் அணிவிக்கப்பட்டிருந்த புறாக்கள் வீடியோ சற்று குழப்பத்தை ஏற்படுத்தியது. லாஸ் வேகாஸ் நகரின் டிராபிகானா அவென்யூ மற்றும் மேரிலேண்ட் பகுதிகளில் சில புறாக்கள் சிவப்பு நிற தொப்பிகள் அணிவிக்கப்பட்டு உலாவிக் கொண்டிருந்தன. இதைக் கண்ட பொதுமக்கள் முதலில் ஆச்சரியமாக பார்த்தனர். பின்னர் அதை வீடியோவாக எடுத்து வலைத்தளங்களில் பதிவேற்றினர். இது குறித்து லாஸ் வேகாஸ் நகரைச் சேர்ந்த புறாக்கள் மீட்பு ஆர்வலர் கூறுகையில், தொப்பி அணிந்த புறாக்களை பார்க்க முதலில் அழகாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனால் அவற்றின் தலையில் எவ்வாறு தொப்பி வந்தது? அதற்கான காரணம் என்ன? போன்ற கேள்விகள் எழுந்தன. அந்த தொப்பிகள் புறாக்களின் தலையில் பசை மூலம் ஒட்டப்பட்டிருந்தால் அவை துன்புறுத்தப்பட்டிருக்கலாம். இதை யார் செய்திருப்பார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இதே போன்ற புறாக்கள் எங்கு தென்பட்டாலும் எங்களை தொடர்பு கொள்ளுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து