வெப்பச்சலனம் காரணமாக வறண்ட வானிலை நிலவும் - சென்னை வானிலை மையம் தகவல்

புதன்கிழமை, 11 டிசம்பர் 2019      தமிழகம்
Chennai Meteorological Centre 2019 08 01

சென்னை : வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வந்தது. இதனால் மாநிலத்தில் இருக்கும் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது. பல அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சென்னையிலும் பலத்த மழை பெய்ததால் ஏரிகள் நிரம்பத் தொடங்கின. சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் அளவும் உயர்ந்துள்ளதாக அரசு தெரிவித்தது.

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

தமிழகம் மற்றும் புதுவையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி தமிழகம் மற்றும் புதுவையின் எந்த பகுதிகளிலும் மழை பதிவாகவில்லை, என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து