முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்யசபாவிலும் நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா - ஆதரவு 125, எதிர்ப்பு 105 வாக்குகள்

புதன்கிழமை, 11 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதா, இன்று மாநிலங்களவையில் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 125 எம்.பி.க்களும் எதிராக 105 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.

இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்திருத்த மசோதா லோக்சபாவில் டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடந்தது. இதில், ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் கிடைத்தன. இதனால் மக்களவையில் எளிதாக இந்த சட்ட மசோதா நிறைவேறியது. இந்த நிலையில்  மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 102 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் அங்கு மசோதாவை நிறைவேற்ற 120 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 245 இடங்களை கொண்ட மாநிலங்களவையின் தற்போதைய முழு பலம் 238 ஆகும். இதனால் பா.ஜ.க. தனது மசோதாவை நிறைவேற்ற மற்ற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. தீவிர விவாதங்களுக்கு பிறகு, இரவு 8.15 மணியளவில் மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மசோதாவில் எதிர்க்கட்சிகள் சார்பில், கொண்டுவரப்பட்ட சில திருத்தங்கள் ஏற்கப்பட்டன. பல திருத்தங்கள் ஏற்கப்படவில்லை. இதையடுத்து டிவிஷன் முறையில், மசோதா மீது வாக்கெடுப்பு துவங்கியது. அதில், மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. முன்னதாக சிவசேனா வெளிநடப்பு செய்தது. இது பா.ஜ.க.வுக்கு ஆதரவான நடவடிக்கையாக பார்க்கப்பட்டது. இதனால், இந்த சட்டம் நிறைவேறியுள்ளது. இரு அவைகளும் நிறைவேறிய இந்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதும், சட்டம் நடைமுறைக்கு வரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து