முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெ. வாழ்க்கை வரலாறு படம் மற்றும் தொடருக்கு தடை விதிக்க முடியாது - சென்னை ஐகோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமான தலைவி, குயின் இணையதள தொடருக்கு தடை விதிக்க முடியாது என ஜெ. தீபா தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் இந்தியிலும் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதேபோல் கவுதம் வாசுதேவ் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் வெளியிட தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் ஜெ.தீபா சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்; ஜெயலலிதாவின் வாழ்க்கை விவரங்கள் தனக்கு தெரியும் என்றும் இணையதள தொடரை எடுக்க அனுமதிக்க முடியாது என்றும் இந்த கதையில் தங்களது குடும்ப அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம். ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிப்பார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது, ஜெயலலிதாவின் உறவினர் என்கிற முறையிலும், அவருடன் பல்வேறு சந்தர்ப்பங்களின் போது உடனிருந்தவர் எனும் முறையில், தன்னைப் பற்றியும் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும் எனவும் அது தன்னுடைய சுதந்திரத்தை பாதிக்கும் என்றும் ஜெ.தீபா மனுவில் குறிப்பிட்டிருந்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தடை கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் தலைவி படம் மற்றும் குயின் இணையதள தொடருக்கு தடையில்லை என்று ஐகோர்ட் உத்தரவிட்டது.

ஜெ.தீபா பற்றி குயின் இணையதள தொடரில் காட்சிகள் ஏதும் இல்லை என்று இயக்குனர் கௌதம் மேனன் தரப்பில்  ஐகோர்ட்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மேலும் படம் கற்பனையானது என்று அறிவிப்பு வெளியிட தலைவி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து