எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் (விண்டீஸ்) அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற உள்ளது. 8 ஆண்டுகளுக்குபின்னர் இவ்விரு அணிகளும் சென்னையில் மோத உள்ளதால், ரசிகர்களிடையே இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி கிரிக்கெட் விளையாடிவருகிறது. இரு அணிகள் இடையிலான டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியனானது. இதனைத் தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளன. முதல் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதனையொட்டி, போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் மணிஷ் பாண்டே, ஷிவம் துபே உள்ளிட்டோர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். கேப்டன் கோலி, ரோஹித், புதிதாக இணைந்த மயங்க் அகர்வால் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். அதேபோல், விண்டீஸ் அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் பழைய அதிரடி பார்மிற்கே திரும்பியுள்ள வெஸ்ட் இண்டீஸை, சமபலத்துடன் உள்ள இந்திய அணி வெளுத்து வாங்குமா? என்பது இன்று தெரிந்துவிடும். இந்தியா-விண்டீஸ் அணிகள் கடைசியாக சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி நடந்த ஒருநாள் போட்டியில் மோதின. தற்போது 8 ஆண்டுகள் கழித்து இரு அணிகளும் மீண்டும் இங்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.
ராகுல் துவங்குவாரா?
உள்ளூர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பட்டையை கிளப்பி வரும் இந்திய வீரர் கே.எல்.ராகுல், அதே உத்வேகத்துடன் விண்டீசுக்கு எதிரான டி20 தொடரிலும் வெளுத்து வாங்கி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவின் தொடக்க வீரர் ஷிகர் தவாண் காயத்தால் விலக, டி20 தொடரில் ரோஹித்துடன் ஜோடி சேர்ந்து தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார், ராகுல். ஆனால், ஒருநாள் தொடரில் தவாணுக்கு மாற்றாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளதால், ராகுல் தொடக்க வீரராக களமிறக்கப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
புவிக்கு பதில் ஷர்தல்:
விண்டீசுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டது. காயத்தின் வீரியம் இன்றளவும் குறையாத காரணத்தால், ஒருநாள் தொடரில் இருந்து புவனேஷ்வர் விலகியுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்துள்ளது. இவருக்கு மாற்றாக பந்துவீச்சாளர் ஷர்தல் தாக்கூர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சேப்பாக்கத்தில் இந்தியா எப்படி?
சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, அதில் 7-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது. இரு போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. விண்டீஸ் அணி இங்கு விளையாடிய 6 போட்டிகளில் 1-ல் தான் வெற்றி பெற்றுள்ளது. அந்த ஒரு வெற்றியும் இந்தியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கு நடந்த ஒருநாள் போட்டியில் 299 ரன்கள் எடுத்ததே இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராகும்.
மழை வாய்ப்பு?
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழையும், ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று காலை முதலே சென்னையில் பரவலாக அவ்வபோது மழை பெய்து வருகிறது. போட்டி நடக்கவுள்ள சேப்பாக்கத்தில் இன்று முழுவதும் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும், போட்டி நேரத்தில் மழை வர அதிகபட்ச வாய்ப்பு 24 சதவீதம் என்று கணிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் சற்று மனதை தேற்றிக்கொள்ளலாம்.
இந்தியா, விண்டீஸ் அணிகள் மொத்தம் 130 ஒருநாள் போட்டிகளில் மோதின. இரு அணிகளும் தலா 62 போட்டியில் வெற்றி பெற்று சமபலத்துடன் திகழ்ந்து வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெல்லையில் உற்சாக வரவேற்பு
20 Dec 2025சென்னை, 2 நாள் பயணமாக நெல்லை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி விஜய் மீது அமைச்சர் ரகுபதி விமர்சனம்
20 Dec 2025சென்னை, ஆறு மாதம் நடித்துவிட்டு முதல்வராவது எல்லாம் சினிமாவில் நடக்கும், அரசியலில் உண்மையில் நடக்காது என விஜய்யை விமர்சித்துள்ள அமைச்சர் ரகுபதி, நாங்கள் தீய சக்தி இல்லை
-
கீழடி, நம் தாய்மடி - பொருநை, தமிழரின் பெருமை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பெருமிதம்
20 Dec 2025சென்னை, நம்முடைய பெருமையையும் வரலாற்றையும் நாம் முதலில் தெரிந்து கொண்டால் தான், உலகத்திற்கு அதை எடுத்துச் சொல்ல முடியும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார்?
20 Dec 2025புதுச்சேரி, த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
-
தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் 62 கோடி ரூபாய் மதிப்பிலான பொருநை அருங்காட்சியகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
20 Dec 2025நெல்லை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் ரூ.62 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நேற்று திறந்து வைத்து பார்வையிட
-
தமிழருவி மணியன் கட்சி த.மா.கா.வில் இணைந்தது
20 Dec 2025சென்னை, தமிழருவி மணியன் தனது கட்சியை ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.
-
தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை: அமைச்சர் சேகர்பாபு
20 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கின்ற வரையில் தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
அப்டேட் இல்லாமல் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சர் விமர்சனம்
20 Dec 2025திருச்சி, த.வெ.க. தலைவர் விஜய் அப்டேட் இல்லாமல் இருக்கிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் சரண்
20 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண் அடைந்தனர்.
-
தமிழகம் மதநல்லிணத்துக்கு எடுத்துகாட்டான மாநிலம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
20 Dec 2025நாகப்பட்டினம், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.
-
தங்கள் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி: சிரியாவில் பயங்கரவாதிகள் மீது அமெரிக்க படைகள் திடீர் தாக்குல்
20 Dec 2025டிரிபோலி, இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்.
-
மேற்கு வங்கத்தில் பா.ஜ.வுக்கு வாய்ப்பு ஒன்றை தாருங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
20 Dec 2025கொல்கத்தா, பீகார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.
-
கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிப்பு
20 Dec 2025சென்னை, கலைஞர் பொற்கிழி விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
ஸ்ரீனிவாசன் நல்ல நண்பர்: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
20 Dec 2025சென்னை, ஸ்ரீனிவாசன் எனது நல்ல நண்பர் என்று நடிகர் ரஜினிகாந்த் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தைவான் நடந்த கத்திக்குத்து சம்பவம்: 3 பேர் உயிரிழப்பு
20 Dec 2025தைபேய், ஆசிய நாடான தாய்வானின் தலைநகர் தைபேயில் நேற்று மாலை நடந்த கத்திக் குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
-
எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
20 Dec 2025ஆமதாபாத், எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத் மாநிலத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
-
அசாமில் ரயில் மோதி 8 யானைகள் பலி
20 Dec 2025கவுகாத்தி, அசாமில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 8 யானைகள் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நாகூர் இ.எம்.ஹனீபா நினைவு மலர்: துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டார்
20 Dec 2025சென்னை, நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
-
பொங்கல் பண்டிகைக்கு பிறகு த.வெ.க.வை பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன்
20 Dec 2025கோவை, பொங்கலுக்குப் பிறகு எங்களை பார்த்து நாடே வியக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஆஸ்திரேலியா கதாநாயகனின் சிகிச்சைக்கு குவிந்த நன்கொடை
20 Dec 2025கான்பெரா, ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிக பிரபலமானது.
-
த.வெ.க. நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
20 Dec 2025சென்னை, த.வெ.க. நிர்வாகிகளுடன் விஜய் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
-
அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழப்பு
20 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் 4 பேர் நீக்கம்
20 Dec 2025சென்னை, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் நான்கு பேரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இஷான், ரிங்கு சிங், சஞ்சு சாம்சன்
20 Dec 2025மும்பை, 10-வது டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இஷான், ரிங்கு சிங், சாம்சனுக்கு இடம் கிடைத்துள்ளது. இதில் சுப்மன் கில்லுக்கு அணியில் இடம் பெறவில்லை.
-
தமிழில் பேச முடிந்தவரை முயற்சி செய்கிறேன்: கவர்னர் ஆர்.என்.ரவி
20 Dec 2025சென்னை, தமிழில் பேச முடிந்தவரை முயற்சி செய்கிறேன் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.


