எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நம்முடைய பெருமையையும் வரலாற்றையும் நாம் முதலில் தெரிந்து கொண்டால் தான், உலகத்திற்கு அதை எடுத்துச் சொல்ல முடியும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.
நெல்லை மற்றும் தூத்துக்குடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு பணியின்போது போது கண்டறியப்பட்ட பொருட்களை வைக்க திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம் பிரமாண்டபமாக உருவாகியுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில், பொருநை அருங்காட்சியகத்தின் சிறப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றியதாவது; எல்லோருக்கும் என்னுடைய அன்பான தமிழ் வணக்கம். தமிழ்நாட்டின் முதல்வராக, உங்கள் எல்லோரையும் திருநெல்வேலி நோக்கி அழைக்க தான் இந்த வீடியோ. வரலாற்றை தெரிந்து கொள்வதும் – மீட்டெடுப்பதும் எதற்காக? வெறும், பழம்பெருமையை பேசி, அதில் மனநிறைவு அடைவதற்காகவா? இல்லை. நாம் வந்த பாதையை தெரிந்து கொண்டு, எதிர்காலத்தில் இன்னும் முற்போக்காக, இன்னும் பரந்த மனப்பான்மையோடு வளர்வதற்கான தேடல் அது.
இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, தமிழ்நிலப்பரப்பில் இருந்து தான் எழுதப்பட வேண்டும் என்று தொடர்ந்து நான் சொல்லி கொண்டு வருகிறேன். இது ஏதோ தற்பெருமைக்காகவோ, மேடை அலங்காரத்துக்காகவோ பேசிய வெற்றுப் பேச்சு இல்லை. “அறிவியல்பூர்வமான உண்மை இது”- என்று நம் திராவிட மாடல் அரசு தொடர்ந்து மெய்ப்பித்துக் கொண்டு வருகிறோம். மதுரைக்கு பக்கத்தில் கீழடி அகழ்வாய்வு கண்டுபிடிப்புகளைக் கொண்டு கீழடி அருங்காட்சியகத்தை மிகவும் கம்பீரமாக உருவாக்கி இருக்கிறோம். அடுத்ததாக, இப்போது திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறேன்.
பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தில் நுண்-கற்கருவிக் காலம் தொடங்கி, இரும்புக் காலம், தொடக்க வரலாற்று காலம்- என்று தொடர்ச்சியாக வரலாற்றுத் தடயங்கள் பொருநை ஆற்றங்கரைப் பகுதிகளில் ஏராளமாக கிடைக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், சங்ககாலத் துறைமுக நகரமான கொற்கையை பற்றி, சங்க இலக்கியங்களில் முழுமையாக பார்க்கலாம். ‘தாலமி’, ‘பிளினி’ போன்ற அயல்நாட்டவர்களும் இதுபற்றி நிறையவே எழுதி இருக்கிறார்கள். கொற்கையில் கிடைக்கக்கூடிய முத்துக்களைப் பற்றி சிறப்பாக குறிப்பிடுகிறார்கள். அதேபோல ஆதிச்சநல்லூர், சிவகளை போன்ற இடங்களில், இரும்புக் காலத்தைச் சார்ந்த புதைப்பிடப் பகுதிகளும், மக்கள் வாழ்விடப் பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலை உலகுக்கு கொடையாக கொடுத்த ராபர்ட் கால்டுவெல், 1876-ம் ஆண்டிலேயே கொற்கையை ஆய்வு செய்ததோடு, சிறிய அளவிலே அகழாய்வும் செய்தார். அதேபோல, ஜாகர் – அலெக்ஸாண்ட்ரே நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்திருக்கிறார்கள். தமிழர் பண்பாட்டின் தொன்மையையும் சிறப்பையும், உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் முயற்சியில் நம் அரசு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.
பொருநை ஆற்றங்கரையின் முக்கியமான இடங்களில் தமிழ்நாடு தொல்லியல் துறை விரிவாக நடத்திய அகழாய்வுகளில், ஏராளமான சான்றுகள் வெளியே கொண்டுவரப்பட்டு இருக்கிறது. ஆதிச்சநல்லூர், சிவகளையில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் – வெண்கலம், தங்கம், செம்பு, இரும்பு என்று பல்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட தொல்பொருட்கள் வெளிக்கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதில் குறிப்பாக, இரும்பை உருக்கி கருவிகளை செய்யும் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில்தான் சிறப்பாக இருந்திருக்கிறது.
தொல்லியல் அகழாய்வுகளில் இதுவரை கிடைத்த இரும்பு பொருட்களிலேயே, காலத்தால் முந்தைய இரும்பு சிவகளையில் கிடைத்த இரும்புதான் என்பதும் அறிவியல் அடிப்படையிலான காலக்கணிப்பு முடிவுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உலகின் தலைசிறந்த ஆய்வறிஞர்கள் முன்னிலையில இந்த அறிவிப்பை ஜனவரி 2025-ல் நான் உலகுக்கு வெளியிட்டேன்.
பொருநை ஆற்றங்கரை அகழாய்வுகளில் கிடைத்த தொல் பொருட்கள் இந்த பகுதியிலேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தப்படும் என்று அறிவித்து, அந்தப் பணிகள் நிறைவடைந்து இப்போது பிரமாண்டமாக உருவாகியிருக்கிறது. மின் விளக்குகளின் அலங்காரத்தில் ஜொலிக்கின்ற பொருநை அருங்காட்சியகத்தின் டிரோன் காட்சிகளை உங்களில் பலர் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
2023-ம் ஆண்டு மார்சில் நான் திறந்து வைத்த கீழடி அருங்காட்சியகத்தை, 2025 நவம்பர் வரை, 12 லட்சத்து 50 ஆயிரம் பேர் உலகெங்கும் இருந்து வந்து பார்த்திருக்கிறார்கள். நேரில் வர முடியாதவர்களும் இருந்த இடத்திலிருந்தே, இணையவழி மூலமாக கீழடி அருங்காட்சியகத்தை விர்ச்சுவலா சுத்திப் பாக்க ‘மெய்நிகர் இணையவழி சுற்றுலா’வை உருவாக்கி கொடுத்திருக்கோம்.
இப்போது பொருநை அருங்காட்சியமும் 55 ஆயிரம் சதுர அடியில் மரபார்ந்த வடிவமைப்போடு, அதே நேரத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டிருக்கிறது. டிஜிட்டல் முறையில் உருவகப்படுத்தப்பட்ட இரும்பு உருக்கு செயல்முறை, 5-D முறையில் தமிழ் நிலங்களின் வழியாக உணர்வுப் பயணம், பாண்டி விளையாட்டு தரை ஒளிபடக் காட்சி, தொல்லியல் வரலாற்றுப் பின்புலம் குறித்த டாக்குமெண்டரி படம், மெய்நிகர் படகு அனுபவ உருவகம், ஆற்றுப் பள்ளத்தாக்கு நாகரிகங்களின் தொடுதிரை காட்சி, கருவிகளை உருவாக்கும் ஊடாடு சுவர் அதாவது இண்டராக்டிவ் வால், டிஜிட்டல் பீட்பேக் மையம், பொருநையின் குரல் பயணம் போன்ற ஏராளமான நவீன தொழில்நுட்ப அனுபவங்கள் இங்கே நீங்கள் பெறலாம்.
தமிழர்களின் தொன்மையை, தமிழர்களின் நாகரிக மேன்மையை இந்த தலைமுறையினருக்கு மட்டுமல்ல, ஜென்-சீ உள்ளிட்ட அடுத்தடுத்த தலைமுறைக்கும் எடுத்து கொண்டு போக வேண்டும் என்று பார்த்து பார்த்து இவ்வளவும் செய்திருக்கிறோம். என்னுடைய இந்த எண்ணம் ஈடேற நீங்கள் எல்லோரும் உங்கள் குடும்பங்களோடு கீழடி அருங்காட்சியகத்தையும், பொருநை அருங்காட்சியத்திற்கும் அணி அணியாக வர வேண்டும் என்று அன்போடு, உரிமையோடு அழைக்கிறேன்.
நம்முடைய பெருமையையும் வரலாற்றையும் நாம் முதலில் தெரிந்து கொண்டால் தான், உலகத்திற்கு அதை எடுத்துச் சொல்ல முடியும். அதற்கான நம் அரசின் முயற்சிக்கு உங்கள் ஆதரவு வேண்டும். கீழடி, நம் தாய்மடி. பொருநை, தமிழரின் பெருமை.- என்றுஉரக்கச் சொல்வோம். இவ்வாறு அதில் அவர் பேசியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
மேலும் ஒரு வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 17 ஆண்டுகள் சிறை - ரூ.1.64 கோடி அபராதம்
20 Dec 2025இஸ்லமபாத், தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகிய இருவருக்கும் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை வ
-
குடியுரிமையை பறிக்க பா.ஜ.க.வினர் முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு
20 Dec 2025கோவை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்குரிமையை பறித்து பின்னர் குடியுரிமையை பறிக்க முயற்சிக்கின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
-
எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி விஜய் மீது அமைச்சர் ரகுபதி விமர்சனம்
20 Dec 2025சென்னை, ஆறு மாதம் நடித்துவிட்டு முதல்வராவது எல்லாம் சினிமாவில் நடக்கும், அரசியலில் உண்மையில் நடக்காது என விஜய்யை விமர்சித்துள்ள அமைச்சர் ரகுபதி, நாங்கள் தீய சக்தி இல்லை
-
எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் வரும் 24-ம் தேதி கடலுக்கு செல்ல தடை
20 Dec 2025திருவள்ளூர், ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் 24-ந்தேதி கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
20 Dec 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெல்லையில் உற்சாக வரவேற்பு
20 Dec 2025சென்னை, 2 நாள் பயணமாக நெல்லை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகம் மதநல்லிணத்துக்கு எடுத்துகாட்டான மாநிலம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
20 Dec 2025நாகப்பட்டினம், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.
-
ஸ்ரீனிவாசன் நல்ல நண்பர்: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
20 Dec 2025சென்னை, ஸ்ரீனிவாசன் எனது நல்ல நண்பர் என்று நடிகர் ரஜினிகாந்த் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-12-2025.
20 Dec 2025 -
கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிப்பு
20 Dec 2025சென்னை, கலைஞர் பொற்கிழி விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
கீழடி, நம் தாய்மடி - பொருநை, தமிழரின் பெருமை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பெருமிதம்
20 Dec 2025சென்னை, நம்முடைய பெருமையையும் வரலாற்றையும் நாம் முதலில் தெரிந்து கொண்டால் தான், உலகத்திற்கு அதை எடுத்துச் சொல்ல முடியும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை: அமைச்சர் சேகர்பாபு
20 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கின்ற வரையில் தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
அப்டேட் இல்லாமல் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சர் விமர்சனம்
20 Dec 2025திருச்சி, த.வெ.க. தலைவர் விஜய் அப்டேட் இல்லாமல் இருக்கிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
அசாமில் ரயில் மோதி 8 யானைகள் பலி
20 Dec 2025கவுகாத்தி, அசாமில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 8 யானைகள் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
20 Dec 2025ஆமதாபாத், எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத் மாநிலத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
-
பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை
20 Dec 2025பாரீஸ், பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் 62 கோடி ரூபாய் மதிப்பிலான பொருநை அருங்காட்சியகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
20 Dec 2025நெல்லை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் ரூ.62 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நேற்று திறந்து வைத்து பார்வையிட
-
பொங்கல் பண்டிகைக்கு பிறகு த.வெ.க.வை பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன்
20 Dec 2025கோவை, பொங்கலுக்குப் பிறகு எங்களை பார்த்து நாடே வியக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
தமிழருவி மணியன் கட்சி த.மா.கா.வில் இணைந்தது
20 Dec 2025சென்னை, தமிழருவி மணியன் தனது கட்சியை ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.
-
அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழப்பு
20 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நாகூர் இ.எம்.ஹனீபா நினைவு மலர்: துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டார்
20 Dec 2025சென்னை, நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
-
தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் சரண்
20 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண் அடைந்தனர்.
-
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஆஸ்திரேலியா கதாநாயகனின் சிகிச்சைக்கு குவிந்த நன்கொடை
20 Dec 2025கான்பெரா, ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிக பிரபலமானது.
-
தங்கள் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி: சிரியாவில் பயங்கரவாதிகள் மீது அமெரிக்க படைகள் திடீர் தாக்குல்
20 Dec 2025டிரிபோலி, இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்.
-
த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார்?
20 Dec 2025புதுச்சேரி, த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.


