முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் தற்போது இல்லை: அமித்ஷா

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா தனியார் செய்தி நிறுவனத்துக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தேசிய குடிமக்கள் பதிவேடுக்கும், தேசிய மக்கள் தொகை பதிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக விவாதிக்க எந்தவித தேவையும் இல்லை, பிரதமர் சரியாக கூறியுள்ளார், பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் இது குறித்து விவாதம் நடத்த தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து