முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்போன்களை தவிர்த்துவிட்டு குடும்பத்தினருடன் உரையாடுங்கள்: போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவுரை

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2019      உலகம்
Image Unavailable

செல்போன்களை தவிர்த்துவிட்டு குடும்பத்தினருடன் உரையாடுங்கள் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவுரை கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில் ஆடம்பர பொருளாக பார்க்கப்பட்டு வந்த செல்போன் தற்போது மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகி விட்டது. அதிலும் குறிப்பாக இளசுகளுக்கு செல்போன்  ஆறாம் விரலாகவே மாறிவிட்டது. தூங்கும் நேரத்தை தவிர கிட்டத்தட்ட நாள் முழுவதும் செல்போனில் மூழ்கி கிடக்கிறார்கள்.

அப்படி செல்போன்களுக்கு அடிமையானவர்களுக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவுரை வழங்கி உள்ளார். உங்கள் செல்போன்களை தூர வைத்துவிட்டு குடும்பத்துடன் அமர்ந்து உரையாடுங்கள் என அவர் கூறினார். ஏசு கிறிஸ்து, மேரி, ஜோசப் ஆகியோரை மேற்கோள்காட்டி அவர்கள் உரையாடினார்கள், உழைத்தார்கள், வழிபட்டார்கள் அதையே நீங்களும் செய்யுங்கள் என போப் பிரான்சிஸ் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நாம் குறைந்தபட்சம் உணவு மேஜையில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் போதாவது செல்போன்களில் மூழ்காமல் குடும்பத்துடன் உரையாட வேண்டும். பெற்றோரே, குழந்தைகளே, சகோதர, சகோதரிகளே இந்த புனிதமான பணியை இன்றே நாம் தொடங்குவோம் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து