முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி, பிரதமருக்கு மலர்க்கொத்துக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து

புதன்கிழமை, 1 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்க்கொத்துக்களுடன் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

முதல்வர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டை முன்னிட்டு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துக்கு மலர்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பி வைத்தார். அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு:-

தமிழக அரசு சார்பிலும், தமிழ்நாட்டு மக்கள் சார்பிலும் உங்களுக்கு என்னுடைய மகிழ்ச்சிகரமான புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டுக்கு இன்னும் வலிமையோடு சேவையாற்ற  இறைவன் உங்களுக்கு அருள் வழங்க வேண்டும் என்று அந்த வாழ்த்துச் செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில், தேசத்தின் வளர்ச்சி பாதைக்கும் அமைதிக்குமான தொடர் பயணத்தை நோக்கி உங்களின் சிறப்பான தலைமையில் முன்னெடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய வாழ்த்து செய்தியில், உங்களுக்கும் உங்கள் துணைவியார் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்த்துக்கு அனுப்பிய வாழ்த்து கடிதத்தில் இந்த புத்தாண்டு தினத்தில் உங்களுக்கும், உங்கள் துணைவியார் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டுக்கு தொடர்ந்து நீங்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தனக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் நன்றியையும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து