முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூடான் டைல்ஸ் கம்பெனியில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : சூடான் நாட்டில் செராமிக் டைல்ஸ் கம்பெனியில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்த நாகப்பட்டினம், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழர்கள் 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள அமைந்துள்ள சூடான் நாட்டில்  இயங்கி வரும் செராமிக் டைல்ஸ் கம்பெனியில் 3.12.2019 அன்று கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த, நாகப்பட்டினம் மாவட்டம், அகரகொந்தகை  கிராமத்தைச் சேர்ந்த இராமலிங்கம் என்பவரின் மகன் இராமகிருஷ்ணன் மற்றும்  கடலூர் மாவட்டம், விருதாசலம் வட்டம், செம்பளாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த செல்வராசு என்பவரின மகன் ஜெயக்குமார் மற்றும் பண்ருட்டி வட்டம் மானாடிகுப்பன் கிராமத்தைச் சேர்ந்த முருவன் என்பவரின் மகன் ராஜசேகர் ஆகிய மூவரும்  உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

இந்து துயரச் செய்தியை அறிந்த உடனேயே,  சூடான் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு, அவர்களது குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்குமாறு பாரத பிரதமரை 4.12.2019 அன்று நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உயிழந்தவர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கட்டன. மேற்கண்ட துயரச்  சம்பவத்தில் உயிரிழந்த இராமகிருஷ்ணன்,  ஜெயக்குமார் மற்றும் ராஜசேகர் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த  இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து  தலா  மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து