103-வது பிறந்த நாள்: சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2020      தமிழகம்
MGE birthday Chennai 2020 01 17

எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் சென்னை, கிண்டி, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அம்மாவின் நல்லாசியுடன் செயல்படும் முதல்வர் எடப்பாடிபழனிசாமி தலைமையிலான அரசு, தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்தநாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில், எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான ஜனவரி 17-ம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை, கிண்டி, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  இந்நிகழ்வில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ. செங்கோட்டையன், செல்லூர் கே.ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், டாக்டர். வி.சரோஜா, எம்.சி. சம்பத், ஆர். காமராஜ், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், இரா.துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ, வெல்லமண்டி ந.நடராஜன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, பா.பென்ஜமின், நிலோபர் கபீல், வி.எம்.ராஜலெட்சுமி,  க.பாண்டியராஜன்,  சேவூர் எஸ்.இராமச்சந்திரன்,  எஸ்.வளர்மதி, சட்டசபை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவர் பா. வளர்மதி,  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், சீர்மிகு பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் க.சண்முகம். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு செயலாளர் டாக்டர். பீலா ராஜேஷ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் பொ. சங்கர்,  தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் மரு. சுதா சேஷைய்யன், கூடுதல் இயக்குநர்கள் உல. இரவீந்திரன்(மக்கள் தொடர்பு), கி. சாந்தி(செய்தி), இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து