சென்னை அ.தி.மு.க. தலைமையகத்தில் கோலாகலம்: எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2020      தமிழகம்
MGR -statues  EPS - OPS 2020 01 17

எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அ தி.மு.க. நிறுவனத் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு, அ.தி.மு.க. தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அ தி.மு.க. நிறுவனத் தலைவர், புரட்சித் தலைவர் ‘பாரத் ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆரின் 103–வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று காலை (17-ம் தேதி), சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு அ தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து, தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அங்குள்ள ஜெயலலிதா சிலைக்கும் மாலை அணிவித்தார்கள். அப்போது, இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் திரளாகக் கூடியிருந்த கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினார்கள். தலைமை கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் மலர்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த பகுதி முழுவதும் ஏராளமான அ தி.மு.க. கொடி, தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. தொண்டர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். அ தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் கே.ஏ. செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, பி. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ், டாக்டர் விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.டி. ராஜேந்திர பாலாஜி, பென்ஜமின் உள்ளிட்ட அமைச்சர்கள், தம்பிதுரை, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆர். வைத்திலிங்கம் எம்.பி., கே.பி.முனுசாமி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, என்.ஆர். சிவபதி, அமைப்பு செயலாளர் ஜே.சி.டி. பிரபாகர், மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, தி.நகர் பி.சத்தியா, விருகை வி.என். ரவி, ஆர்.எஸ்.ராஜேஷ், டி.ஜி. வெங்கடேஷ் பாபு, வாலாஜாபாத் கணேசன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், விவசாய பிரிவு செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.பி.க்கள் டாக்டர் மைத்ரேயன், டாக்டர் ஜெயவர்த்தன், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், ஆதிராஜாராம், மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார், மாநில இலக்கிய அணி இணை செயலாளர்கள் நடிகர் ஜெயகோவிந்தன், டி.சிவராஜ், ஆர்.எம்.டி. ரவீந்திர ஜெயன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.குப்பன், கே.பி.கந்தன், வழக்கறிஞர் ஆர். சதாசிவம், பரிமேலழகர், ஏ.ஏ. அர்ஜூணன், கே.துளசி, மின்சாரம் சத்திய நாராயண மூர்த்தி, தி.நகர் ஆறுமுகம், ஆ.பழனி, டாக்டர் சுனில், மீனவர் அணி செயலாளர் நீலாங்கரை முனுசாமி, செய்தி தொடர்பாளர் கோவை சத்தியன், செம்மலை எம்.எல்.ஏ., லிகாயத் அலிகான், கே.எஸ். அஸ்லாம், முத்துபரணி, பி.சின்னையன், பி.இளையமாறன், இளைஞர் அணி பகுதி செயலாளர் வி.எம்.ஜி. முகுந்தன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் எஸ்.எஸ்.கே. கோபால், ஆயிரம் விளக்கு மனோகர், வடபழனி ராமகிருஷ்ணன், வேல் ஆதித்தன் உட்பட எராளமானபேர் கலந்து கொண்டனர்.

அ தி.மு.க. தலைமை கழகத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்ததை தொடர்ந்து, முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமைக் கழகத்தில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அ. தமிழ்மகன் உசேன் ஏற்பாட்டின்பேரில் தொண்டர்களுக்கு சர்க்கரைப் பொங்கலும், அதே போல், தலைமைக் கழகம் அருகே, தென் சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தி.நகர் சத்தியா எம்.எல்.ஏ., ஏற்பாட்டின்பேரில், பெருந்திரளான அளவில் திரண்டிருந்த கழக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் வெஜிடபிள் பிரியாணியும் வழங்கப்பட்டன. தலைமைக் கழகம் முன்பு தலைமைக் கழக பாடகர் ஆர்.கே.குமாரின் இசை நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. கட்சி கொள்கை விளக்க பாடல்கள், எம்.ஜி.ஆர். பட பாடல்களை பாடி உற்சாகமூட்டினர். தலைமை கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தலைமைக் கழக வளாகம், நுழைவுவாயில், வழிநெடுக ஏராளமான கறுப்பு, வெள்ளை, சிவப்பு பலூன்கள் கட்டப்பட்டு அழகுற காட்சி அளித்தன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு தொண்டர்களும் பொதுமக்களும் ஏராளமான பேர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். சிலை அருகே நின்று ஆர்வத்துடன் அவர்கள் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து