நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதே இலக்கு இங்கிலாந்து கேப்டன் சொல்கிறார்

புதன்கிழமை, 22 ஜனவரி 2020      விளையாட்டு
eng captain 2020 01 22

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற எங்களுக்கு, அடுத்த இலக்கு நம்பர் ஒன் இடம்தான் என இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது கிடையாது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வியை சந்தித்தது. 2-வது டெஸ்டில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியது.இந்த வெற்றியின் மூலம் 2-1 என முன்னிலையில் உள்ளது. கடந்த 8 வருடத்திற்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் இங்கிலாந்து பெற்ற முதல் இன்னிங்ஸ் வெற்றி இதுவாகும். இந்த வெற்றி அந்த அணிக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. இந்த உத்வேகத்துடன் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதே இலக்கு என கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து