முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுபாஷ் சந்திரபோசுக்கு இந்தியா எப்போதும் நன்றியுடன் இருக்கும் - பிரதமர் மோடி டுவிட்டரில் புகழாரம்

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : காலனித்துவத்தை எதிர்ப்பதில் சுபாஷ் சந்திரபோசின் துணிச்சலுக்கும், நிலையான பங்களிப்பிற்கும் இந்தியா எப்போதும் அவருக்கு நன்றியுடன் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் ‘நேதாஜி’ சுபாஷ் சந்திரபோசின் 123-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஜனவரி 23, 1897 அன்று, சுபாசின் தந்தை ஜனகிநாத் போஸ் தனது நாட்குறிப்பில், மதிய வேளையில் ஒரு மகன் பிறந்தான் என்று எழுதினார். அந்த மகன் (சுபாஷ் சந்திரபோஸ்) ஒரு வீரம் மிக்க சுதந்திரப் போராளியாகவும், சிந்தனையாளராகவும் ஆனார், அவர் தனது வாழ்க்கையை ஒரு பெரிய லட்சியத்திற்காக அர்ப்பணித்தார், அதுதான் இந்தியாவின் சுதந்திரம். மேலும் சக இந்தியர்களின் முன்னேற்றத்துக்காகவும் நல்வாழ்வுக்காகவும் அவர் போராடினார் என நேதாஜியை பற்றி பிரதமர் மோடி கூறினார். காலனித்துவத்தை எதிர்ப்பதில் சுபாஷ் சந்திரபோஸின் துணிச்சலுக்கும், நிலையான பங்களிப்பிற்கும் இந்தியா எப்போதும் அவருக்கு நன்றியுடன் இருக்கும் என்றும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து