எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் பீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்டு வருகிறது. இதனை அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி திறப்பதற்காக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு அருகில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.58 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக 2018-ம் ஆண்டு மே 7-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ‘ஷிப்டு’ முறையில் இரவு பகலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 10 பகுதிகளாக பிரிக்கப்பட்ட கட்டுமான பணியில், 8 பகுதி வேலைகள் முடிந்துள்ளன. இதுதவிர நடைபாதை, வாகன நிறுத்தம் ஆகிய பணிகளும் முடிவடைந்துள்ளது. நினைவிடம் அருகில் அருங்காட்சியகம், அறிவுசார் மையம், மேற்கூரை அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. முக்கிய கட்டிடத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டு அதில் நவீன வடிவமைப்பு பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன. பீனிக்ஸ் பறவை வடிவம் 15 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் இறக்கை மட்டும் 2 பக்கமும் 21 மீட்டர் நீளம் இருக்கும். சென்னை ஐ.ஐ.டி. இதற்கான வடிவமைப்பை வழங்கி உள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தின் உயர்கல்வி நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது. துபாயில் இருந்து கட்டுமான சாதனங்கள் எடுத்து வரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. நினைவிடம் முழுவதும் தரையில் கிரானைட் கற்களை பதிக்கும் பணிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது. இது ஓரிரு வாரத்தில் நிறைவடைய உள்ளது. பொதுமக்களை கவரும் வகையில் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனால் கட்டிடக்கலை நிபுணர்களும் அவ்வப்போது கட்டுமான பணிகளை பார்வையிட்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். கட்டுமான பணிகள் மிகவேகமாக நடைபெற்று வருவதால் பார்வையாளர்கள் குறிப்பிட்ட பகுதி வரை மட்டுமே தற்போது அனுமதிக்கப்படுகிறார்கள். ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி நினைவிடத்தை திறக்க அரசு திட்டமிட்டு உள்ளது. அதற்கேற்ப பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. பிப்ரவரி 3-வது வாரத்தில் நினைவிடத்தை அரசிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026 -
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.


