ஆஸ்திரேலியா ஓபன்: 3-வது சுற்றுக்கு முன்னேறிய சுவிட்டோலினா, சிமோனா

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2020      விளையாட்டு
cuvittolina-Simenona advanced 2020 01 23

மெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனைகளான சிமோனா ஹாலெப், சுவிட்டோலினா, கிகி பெர்ட்டன்ஸ் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்த வருடத்திற்கான முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான எலினா சுவிட்டோலினா லாரென் டேவிஸ்-ஐ எதிர்கொண்டார். முதல் செட்டை சுவிட்டோலினா 6-2 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் டேவிஸ் கடும் சவாலாக விளங்கினார். இதனால் ஆட்டம் டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் சுவிட்டோலினா 7(8)-6(6) என வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவன் சிமோனா ஹாலெப் தரநிலை பெறாத பிரிட்டனின் ஹாரியட் டார்ட்-ஐ எதிர்கொண்டார். இதில் ஹாலெப் 6-2, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 9-ம் நிலை வீராங்கனையான கிகி பெர்ட்டன்ஸ் 6-3, 7-5 என வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். ஏஞ்சலிக் கெர்பர் 6-3, 6-2 என வெற்றி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து