சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு: பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சனிக்கிழமை, 25 ஜனவரி 2020      உலகம்
china virus affect 18 killed 2020 01 25

பெய்ஜிங் : சீனாவில் கரோனா வைரஸ் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சீனாவின் தேசிய சுகாதார அமைப்பு கூறும் போது, சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை 41 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 1,287 பேர் இவ்வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.மேலும், சமீபத்திய உயிரிழப்புகள் அனைத்தும் வூஹன் நகரில் ஏற்பட்டுள்ளதாகவும், உலக அளவில் கரோனா வைரஸுக்கு இதுவரை 1,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனா முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், நோய் பரவலைத் தடுக்க சீனாவின் 10 நகரங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நோய் பரவலை தடுக்க கரோனா வைரஸ் பாதிப்புப் பகுதியிலிருந்து வந்தடைந்த மக்கள், தங்கள் வீட்டிலேயே 14 நாட்கள் தங்குமாறு பெய்ஜிங் அரசு வலியுறுத்தியுள்ளது. இதுவரை கரோனா வைரஸ் பாதிப்பு சீனா, ஜப்பான், சிங்கப்பூர், வியட்நாம், தைவான், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து