தமிழகத்தை சேர்ந்த ராமகிருஷ்ணனுக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

சனிக்கிழமை, 25 ஜனவரி 2020      இந்தியா
Ramakrishnan Padmashri award 2020 01 25

புது டெல்லி : பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தை சேர்ந்த ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மொத்தம் 21 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பத்மஸ்ரீ விருதுகள் பெறுபவர்கள் பெயர்கள் பின்வருமாறு:-

தமிழகத்தில் தென்காசி மாவட்டம்  ஆய்க்குடியை சேர்ந்த அமர் சேவா சங்க நிறுவனர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. இவர் 14 ஆயிரம் சிறப்பு குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றியவர் ஆவர். கேரளாவை சேர்ந்த பொம்மலாட்ட கலைஞர் மூழிக்காள் பங்கஜாக்சி, ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி அளித்த கர்நாடக பழ வியாபாரி ஹரேகலா ஹஜப்பாவு, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சமூக சேவகர் ஜகதீஷ் லால் அவுஜாவு, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சமூக சேவகர் முகமது ஷரீப்,  அசாமில் யானைகளுக்கு மருத்துவ சேவையாற்றி வரும் கால்நடை மருத்துவர் குஷால் கன்வார்,  குறைந்த செலவில் மருத்துவ சேவை புரிந்துவரும் மேற்குவங்க மருத்துவர் அருனோடே மண்டல், மராட்டியத்தில் நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்டு வரும் பப்பட்ராவ் பவார் ஆகியோர் ஆவர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து