முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான மாணவி

சனிக்கிழமை, 25 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மானாமதுரை : பெண் குழந்தைகள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மானாமதுரை அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையாக 10-ம் வகுப்பு மாணவி செயல்பட்டார்.   

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மிளகனூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 7 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தில்   ஒருநாள் தலைமை ஆசிரியர் இருக்கையில் காவ்யா என்ற மாணவி அலங்கரித்தார். 10-ம் வகுப்பு மாணவியான அவர் உத்தரவுகள் பிறப்பிக்க மற்ற மாணவ-மாணவிகள் கேட்டு நடந்தனர். முன்னதாக தலைமை ஆசிரியர் விநாயகமூர்த்தி உள்ளிட்ட ஆசிரியர்கள் காவ்யாவை வரவேற்று தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டனர். 

தலைமை ஆசிரியர் பணி குறித்து மாணவிக்கு, விநாயக மூர்த்தி விளக்கினார். அதன்பின் ஆசிரியர்களுடன் காவ்யா ஆலோசனை நடத்தினார். பின்னர் ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று ஆய்வு செய்தார். மாணவ-மாணவியர்களிடம் படிப்பு மட்டுமின்றி விளையாட்டு உள்ளிட்ட பிற துறைகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என அறிவுறுத்தினார். 

மாணவி தலைமை ஆசிரியரானது எப்படி? என்பது குறித்து கேட்டபோது,  பெண் குழந்தைகள் தினம் என்பதால் அதன் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாணவி ஒருவரை ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமித்துள்ளனர். 

அந்த வாய்ப்பு மாணவி காவ்யாவுக்கு கிடைத்துள்ளது. அதாவது, வருகை பதிவு, சக மாணவ, மாணவியர்களிடம் பழகும் மனப்பான்மை, பிறருக்கு உதவி செய்தல் போன்றவற்றில் சிறந்து விளங்கியதால் காவ்யாவை ஒரு நாள் தலைமை ஆசிரியையாக தேர்வு செய்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து