அத்வானியுடன் பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2020      இந்தியா
JP Nadda 2020 01 26

Source: provided

புதுடெல்லி : பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா, முன்னாள் மற்றும் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.    

பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக சில தினங்களுக்கு முன்பு ஜே.பி.நட்டா பொறுப்பேற்றார். இந்த நிலையில் நேற்று அவர் கட்சியின் முன்னாள் மற்றும் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். 

 

இந்த சந்திப்புக்கு பின்னர் ஜே.பி.நட்டா தனது டுவிட்டர் பக்கத்தில், “அத்வானியின் ஆசீர்வாதம் கிடைத்தது. அவர் கட்சி தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கிறார். அவருடைய ஆசீர்வாதங்களுடன் பா.ஜனதாவை மேலும் வலுப்படுத்த நான் அயராது உழைப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து