முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு: மேற்கு வங்க சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களும், பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

குறிப்பாகக் கேரளா, பஞ்சாப் மாநில அரசுகள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கூறி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது.

மூன்றாவது மாநிலமாக குடியரிமைச் சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில் 4-வது மாநிலமாக மேற்குவங்கம் நேற்று குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.இந்த தீர்மானத்தை கொண்டு வந்த பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி ‘‘குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு என எதையும் மேற்குவங்கத்தில் அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம். நாட்டை விட்டு திட்டமிட்டு வெளியேற்ற முயற்சி நடப்பதாக மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. ஆதாரங்களை கேட்டு துன்புறுத்தல்கள் நடப்பதை அனுமதிக்க மாட்டோம். குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடுமுழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எனவே இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்’’ என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து