தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2020      தமிழகம்
TN fishermen arrest SL Navy 2020 01 27

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தவர்கள் விரட்டப்பட்டனர். கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் அதிகம் காணப்படுவதாக தப்பிய வந்த மீனவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி, மீன் பிடித்ததாக, ராமேஸ்வரம் மீனவர்களின் படகு பறிமுதல் செய்யப்பட்டது.11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைதானவர்களை இலங்கை காங்கேசன் துறை முகாமில் வைத்து விசாரித்து வருகின்றனர். மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து