முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலாலாவை துப்பாக்கியால் சுட்ட தலிபான் பயங்கரவாதி சிறையில் இருந்து தப்பினான்

வெள்ளிக்கிழமை, 7 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : மலாலா மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திய தலிபான் பயங்கரவாதி இஷானுல்லா இஷான் பாகிஸ்தான் ஜெயிலில் இருந்து தப்பியுள்ளான்.

பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யுசுப்சாய், பயங்கரவாதிகளின் மனித உரிமை மீறலுக்கு எதிராகவும், பெண் கல்விக்கு ஆதரவாகவும் போராடி வந்தார். கடந்த 2012-ம் ஆண்டு மலாலா மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவரை லண்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார். மலாலா மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திய தலிபான் பயங்கரவாதி இஷானுல்லா இஷானை கைது செய்து பாகிஸ்தான் சிறையில் அடைத்தனர். பெண் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த மலாலாவுக்கு 2014-ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இதற்கிடையே ஜெயிலில் இருந்து பயங்கரவாதி இஷானுல்லா இஷான் தப்பியுள்ளான். அவன் ஜெயிலில் இருந்து தப்பிய பிறகு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான் .அதில் அவன் கூறும்போது, பாகிஸ்தான் சிறையில் இருந்து கடந்த 11-ம் தேதியே தப்பிவிட்டதாகவும், 2011-ம் ஆண்டு தன்னை சரண் அடையுமாறு கூறிய போது அளித்த வாக்குறுதிகளை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நிறைவேற்ற தவறி விட்டதாகவும் கூறியுள்ளான். இஷானுல்லா இஷான் பெஷாவரில் 2014-ம் ஆண்டு ராணுவப் பள்ளியில் நடந்த தாக்குதலில் 132 பள்ளிக் குழந்தைகள் பலியான சம்பவத்தில் தொடர்புடையவன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து