முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிழக்கு திசைகாற்றின் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : கிழக்கு திசைகாற்றின் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வரை பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் கடலுக்குள் மீன்பிடிக்க வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதே சமயம் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியசும் பதிவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் வரும்  மார்ச் மாதத்தில் வெப்பநிலை வழக்கத்தை விட ஒரு டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து