சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற டிரம்புக்கு வழங்கப்பட்ட உணவுகள் என்னென்ன?

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2020      இந்தியா
trump dishes 2020 02 24

அகமதாபாத் : அமெரிக்க அதிபர் டிரம்ப், மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்ற போது அங்கு அவருக்கு வழங்கப்பட்ட உணவுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

சபர்மதி ஆசிரமத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு வழங்க சிறப்பான உணவுகள் தயார் செய்யப்பட்டிருந்தன. அந்த உணவுகளை குஜராத் பார்ச்சூன் நட்சத்திர ஓட்டலின் தலைமை சமையல் கலை நிபுணர் சுரேஷ் கண்ணா தலைமையிலான குழுவினர் தயாரித்திருந்தனர்.

சபர்மதி ஆசிரமத்துக்கு டிரம்ப் வந்தவுடன் அவரை வரவேற்க முதலில் ஆரஞ்சு, கொய்யாப் பழம் கலந்த ஜூஸ் மற்றும் இளநீர் ஆகியவையும், அமெரிக்கன் டீ, இங்கிலிஷ் டீ, டார்ஜிலிங் டீ, அசாம் டீ, க்ரீன் டீ, லெமன் டீ, ஐஸ் டீ, ஜிஞ்ஜர் டீ போன்றவையும், நொறுக்குத்தீனிகளாக, வறுத்தெடுக்கப்பட்ட பாதாம் பருப்புகள், முந்திரி, கேப்ரிகாட், பேரிச்சை, சோக்கோ சிப், பார்கோலி, நைலான் காமன், கார்ன் பட்டர் சமோஸா , சினாமன் ஆப்பிள் பே, ஹனிடிப் குக்கிஸ், பலவிதமான தானியங்கள் கலந்த ரொட்டி, கஜூ கட்லி போன்றவையும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து