எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
							
						சிட்னி : கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை அனுப்ப மாட்டோம் என கனடா மற்றும் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அமெரிக்க நீச்சல் சங்கம், நார்வே ஒலிம்பிக் சங்கம், பிரான்ஸ் நீச்சல் சங்கம், அமெரிக்க தடகள சம்மேளனம், உலக தடகள சம்மேளனம் ஆகியவை ஒலிம்பிக் போட்டியை தள்ளிப் போட வேண்டும் என்று ஏற்கனவே வற்புறுத்தி இருந்தன.
இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஜூலை 24-ம் தேதி தொடங்க இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கனடா அணி பங்கேற்காது என்று கனடா ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் கமிட்டி ஆகியவை அறிவித்துள்ளன. அத்துடன் இந்த போட்டியை ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளன. ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கும் முதல் நாடு கனடாவாகும்.
இது குறித்து கனடா ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கனடா வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் மற்றும் அரசு ஆகியவை இணைந்து டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு கனடா அணியை அனுப்ப வேண்டாம் என்று எடுத்து இருக்கும் கடினமான முடிவுக்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம். அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைத்தால் அதனை மீண்டும் நடத்துவதற்கான முழு உதவிகளையும் அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதேநேரத்தில் இந்த போட்டியை தள்ளி வைப்பதால் உருவாகும் சிக்கல்களையும் நாங்கள் உணர்ந்து இருக்கிறோம். வீரர், வீராங்கனைகளின் நலன் மற்றும் உலக சமூகத்தினரின் சுகாதாரத்தையும், பாதுகாப்பையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது வேறு எதுவுமில்லை.
இது வீரர்களின் நலன் சார்ந்தது மட்டுமல்ல. இது பொது சுகாதாரம் சம்பந்தப்பட்ட விஷயமாகும். இந்த போட்டிக்காக வீரர்கள் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டால் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களுடைய குடும்பம் மற்றும் கனடா மக்களும் பாதிப்பை சந்திக்க வேண்டியது வரலாம். கனடா அரசு அறிவித்துள்ள பொது சுகாதார அறிவுரைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்குடன் ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்கும் முடிவை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலும், சர்வதேச பாரா ஒலிம்பிக் கவுன்சிலும் எடுக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் சிட்னியில் டெலிகான்பரன்ஸ் மூலம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், உலகளவில் தற்போது நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணியை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப வேண்டாம் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகம் முழுவதும் நிலவும் கடினமான சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணியை ஒரு இடத்தில் ஒன்று கூட வைக்க முடியாது. வீரர்கள் தங்களது சொந்த நலனுக்கும், தங்களை சுற்றி உள்ளவர்களின் நலனுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியமானதாகும். இந்த தருணத்தில் வீரர்கள் அனைவரும் வீடு திரும்புவதுதான் சரியானதாக இருக்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
              
          கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago  | 
                  
              
          வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago  | 
                  
              
          மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago  | 
              
-   
          
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-11-2025.
04 Nov 2025 -   
          
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு
04 Nov 2025லக்னோ: உத்தரபிரதேசத்தில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
 -   
          
சபரிமலையில் 16-ம் தேதி நடை திறப்பு
04 Nov 2025திருவனந்தபுரம், சபரிமலையில் வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
 -   
          
சி.பி.எஸ்.இ. 10 - ம் வகுப்புத்தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
04 Nov 2025சென்னை, சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
 -   
          
அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி
04 Nov 2025புதுடெல்லி: பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
 -   
          
இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்
04 Nov 2025ஈரோடு, இரட்டை இலை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார்.
 -   
          
மணிப்பூரில 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
04 Nov 2025இம்பால், மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் சட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
 -   
          
மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்
04 Nov 2025சென்னை, த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 -   
          
பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30 ஆயிரம் நிதி - தேஜஸ்வி யாதவ் உறுதி
04 Nov 2025பாட்னா, இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதி வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் உறுதியளித்துள்ளார்.
 -   
          
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியது
04 Nov 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கியது.
 -   
          
கோவை மாணவி வன்கொடுமை: 3 பேர் சுட்டுப்பிடிப்பு
04 Nov 2025கோவை, கோவை மாணவி வன்கொடுமை குறித்து 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
 -   
          
தி.மு.க.விடம் பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார்: மனோஜ் பாண்டியன் மீது வைகைச் செல்வன் தாக்கு
04 Nov 2025சென்னை, நன்றி மறந்து பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன் என்று வைகைச் செல்வன் தெரிவித்தார்.
 -   
          
160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பீகாரில் தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும்: அமித்ஷா
04 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
 -   
          
திருப்பூரில் பரபரப்பு சம்பவம்: நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து
04 Nov 2025திருப்பூர்: திருப்பூரில் நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 -   
          
இந்த ஆண்டில் மட்டும் ஐ.டி. நிறுவனங்களில் இதுவரை 1 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம்
04 Nov 2025சென்னை: ஐ.டி. நிறுவனங்களில் இந்த அண்டில் மட்டும் இதுவரை 1 லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 -   
          
என்னை கொலை செய்ய முயற்சி: பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் பரபரப்பு புகார்
04 Nov 2025சேலம், அன்புமணியின் ஆதரவாளர்களே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை பா.ம.க. எம்.எல்.ஏ., அருள் முன்வைத்துள்ளார்.
 -   
          
சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி: பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை என்ன?
04 Nov 2025சென்னை: சிறப்பு வாக்காளர் திருத்தப்பணியின் போது பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 -   
          
கிட்னி மோசடி வழக்கு: இ.பி.எஸ் குற்றச்சாட்டு
04 Nov 2025சென்னை: கிட்னி மோசடி வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் முறையாக வாதாடவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
 -   
          
என்னை சீண்ட வேண்டாம்: அன்புமணிக்கு அருள் எம்.எல்.ஏ. எச்சரிக்கை
04 Nov 2025சேலம், அன்புமணி பற்றிய பல உண்மைகள் தெரியும் என்று தெரிவித்துள்ள பா.ம.க. எம்.எல்.ஏ.
 -   
          
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
04 Nov 2025மேட்டூர்: டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருநது தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.;
 -   
          
தொழில்நுட்ப கோளாறு எதிரொலி: துபாய்-மங்களூரு விமானம் ரத்து
04 Nov 2025துபாய்: தொழில்நுட்க கோளாறு காரணமாக துபாய் - மங்களூரு விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
 -   
          
தி.மு.க.வில் இணைந்தது ஏன்..? மனோஜ் பாண்டியன் விளக்கம்
04 Nov 2025சென்னை, தி.மு.க.வில் இணைந்தது குறித்து மனோஜ் பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
 -   
          
காரைக்குடி-மைசூர் இடையே சிறப்பு ரயில்
04 Nov 2025சென்னை: காரைக்குடி-மைசூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 -   
          
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
04 Nov 2025மாஸ்கோ: ரஷ்யாவில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
 -   
          
ம.பி.யில் பயங்கரம்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 3 பேர் பலி
04 Nov 2025போபால்: மத்தியபிரதேசம் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
 



