முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப்ரல் - மே மாதத்தில் கொரோனா உச்சநிலை அடையும்: தமிழகத்தில் ஒரு லட்சம் பேரை தாக்கும் அபாயம்: அமெரிக்க பல்கலைக் கழக ஆய்வில் தகவல்

வியாழக்கிழமை, 26 மார்ச் 2020      இந்தியா
Image Unavailable

வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் உச்சநிலையை அடையும் என்றும் தமிழகத்தில் ஒரு லட்சம் பேர் வரை தாக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா நோய் தாக்குதல் எப்படி இருக்கும் என்று நோய் இயக்கம் பொருளாதார கொள்கை என்ற அமைப்பு அமெரிக்காவின் ஜாம்ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்துடன் இணைந்து பட்டியல் ஒன்றை தயாரித்து உள்ளது. அதாவது இப்போது ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மக்கள் தொகை, ஆரம்ப கட்டத்தில் நோய் தாக்கியவர்கள் எண்ணிக்கை போன்ற விவரங்களை கணக்கிட்டு அதன் அடிப்படையில் புள்ளி விவரம் முறையில் இந்த பட்டியலை உருவாக்கி இருக்கிறார்கள். அதில், வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நோய் தாக்குதல் உச்சநிலையை அடையும் என்று கூறப்பட்டுள்ளது. 3 கோடியே 90 லட்சம் மக்கள் கொண்ட தெலுங்கானாவில் 39 பேருக்கும், 12 கோடியே 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிராவில் 107 பேருக்கும், 8 கோடியே 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் 18 பேருக்கும் நோய் தாக்கி உள்ளது.

இதே போல ஒவ்வொரு மாநிலத்திலும் தாக்கியுள்ள புள்ளி விவரங்கள் அடிப்படையில் இந்த கணக்கீட்டை உருவாக்கி உள்ளனர். இதன்படி நாடு முழுவதும் 12 லட்சத்தில் இருந்து 25 லட்சம் பேர் வரை நோய் தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்பு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 60 ஆயிரம் பேர் வரை நோய் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரி செல்லும் நிலை ஏற்படலாம். மே மாதம் இந்த நோய் தாக்குதல் உச்சத்தில் இருக்கும். நிலைமை மோசமானால் ஒரு லட்சம் பேர் வரை அப்போது பாதிக்கப்படக் கூடும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. மக்கள் வெளியே நடமாடுவதை குறைத்துக் கொண்டால் நோய் தாக்குதல் 75 சதவீதம் வரை குறைவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். எனவே மக்கள் வெளியே நடமாடுவதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். ஒருவருக்கு ஒருவர் தொடர்பு துண்டித்தாலே நோய் பரவுதல் பெரும்பாலும் நின்று விடும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நோய் தாக்கம் தொடர்பாக விரிவான அறிக்கையை அந்த அமைப்பிடம் இருந்து கேட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியிருக்கிறார். இதுசம்பந்தமாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறும் போது, மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பை துண்டிப்பது ஒட்டுமொத்த முடக்கத்தை விட நல்ல பலனை தரும் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து