Idhayam Matrimony

புதின் வீடு மீது உக்ரைன் தாக்குதல் நடத்தவில்லை: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தகவல்

திங்கட்கிழமை, 5 ஜனவரி 2026      உலகம்
Trump-Putin 2024-11-11

வாஷிங்டன், ரஷ்ய அதிபர் புதின் வீட்டின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரைன், ரஷ்யா இடையே இன்று 1 ஆயிரத்து 411வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். விரைவில் உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ரஷ்ய அதிபர் புதினின் அதிகாரப்பூர்வ வீடு மீது உக்ரைன் கடந்த 29ம் தேதி டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. 91 டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பால் முறியடிக்கப்பட்டன. புதின் வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவருவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் வீட்டின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், புதின் வீட்டின் அருகே ஏதோ நடந்துள்ளது. ஆனால், புதின் வீட்டை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியதுபோன்று எங்களுக்கு தெரியவில்லை. புதின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுவதை நான் நம்பவில்லை’ என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து