எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத், தெலங்கானா சட்டமன்றத்தில், 'தனது அரசின் மீதும், விவசாயிகள் மீதான அதன் அர்ப்பணிப்பின் மீதும் கேள்வி எழுப்புபவர்களின் "நாக்கை வெட்டிவிடுவேன்"' என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு மற்றும் பாசனத் திட்டங்கள் தொடர்பான விவாதத்தின்போது பேசிய ரேவந்த் ரெட்டி, "தெலுங்கானா மாநிலம் மற்றும் அதன் விவசாயிகள் மீது எங்களுக்கு இருக்கும் அக்கறைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பினால், அவர்களை நாங்கள் தோலுரிப்போம் என்று அவர் (கே.சி.ஆர்) கூறினார். ஆனால் நாங்கள் அவர்களைத் தோலுரிப்பது மட்டுமல்ல, அவர்களது நாக்கையும் சேர்த்து வெட்டுவோம். நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம், எதை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; ஆனால் எங்கள் அர்ப்பணிப்புக்கு எதிராக கருத்து தெரிவித்தால், எங்களின் விசுவாசமானது உங்கள் நாக்கை வெட்டிவிடும்" என தெரிவித்தார்.
தொடர்ந்து, சபாநாயகர் அவர்களே, இந்தப்பேச்சை நீங்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கலாம். ஆனால் பொதுமக்களின் மனதில் இதைப் பதியவைப்பதற்காக நான் இந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறேன். பத்து வருடங்களாக நீங்கள் எதுவுமே செய்யவில்லை, ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக தண்ணீர் கொண்டு வருவதற்கான அனுமதியைப் பெற நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எங்களை ஏன் அவமானப்படுத்த முயல்கிறீர்கள்? எனவும் பேசியுள்ளார். மேலும் முன்னாள் முதல்வர் கே.சி.ஆர் உடன் தொடர்புடைய இருவர் குறித்து ரேவந்த் ரெட்டி அவையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
ரேவந்த் ரெட்டியின் இந்த வன்முறைத் தூண்டல் பேச்சை "மலிவானது" என்று பி.ஆர்.எஸ் கட்சி கண்டித்துள்ளது. மேலும், அவர் பயன்படுத்திய வார்த்தைகள் பாராளுமன்ற மரபுகளுக்கு எதிரானது என்று கூறி பி.ஆர்.எஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் ரேவந்த் ரெட்டியின் இந்தப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனங்களை பதிவு செய்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


