Idhayam Matrimony

கேரளா: பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜனவரி 2026      இந்தியா
Suicide 2023 04 29

திருவனந்தபுரம், கேரளாவில்  மதவழிபாட்டு தலத்தில் பட்டாசு வெடித்து விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் ஒருவர் படகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கடதி கிராமத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் நேற்று திருவிழா கொண்டாட ஏற்பாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிப்பதற்காக மத வழிபாட்டு தலத்திற்குள்ளேயே நேற்று காலை 8 மணியளவில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டன. இந்த வெடி தயாரிப்பில் ரவி, ஜேம்ஸ் ஆகிய இருவர் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், பட்டாசு தயாரித்தபோது திடீரென பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரவி (வயது 68) உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஜேம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து