பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2020      சினிமா
paravai muniyamma 2020 03 29

பிரபல நாட்டுப்புற பாடகியும், திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா காலாமானார்.

சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி... என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் பரவை முனியம்மா. ஏராளமான கிராமிய பாடல்கள், சினிமா பாடல்கள் பாடியவர். 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரை சேர்ந்தவர் என்பதால் பரவை முனியம்மா என மக்களால் அழைக்கப்படுகிறார். தமிழக அரசின் ‘கலைமாமணி‘ விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற அவர், கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. சமீப காலமாக சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த பரவை முனியாம்மா நேற்று அதிகாலை 2.30 மணிக்கு காலமானார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து