முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கொரோனா 3-ம் கட்டத்திற்கு செல்லாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை: சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 200 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது;

தமிழகத்தில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 485 லிருந்து 571 ஆக அதிகரித்துள்ளது. இன்று(நேற்று) பாதிக்கப்பட்ட 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஆவர். கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-ம் கட்டத்தில்தான் உள்ளது. டெல்லி சென்று வந்தவர்கள் 1246 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தோற்று பாதிப்பில் இருந்து இதுவரை 8 பேர் குணமடைந்துள்ளனர். சோதனையில் கொரோனா இல்லை என்றாலும் 28 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். 28 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு ஏற்படலாம். கொரோனா பரவலை தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழகத்தில் 39 லட்சம் பேர் சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா பாதிப்பில் தமிழகம் 3-ம் கட்டத்திற்குள் செல்லக் கூடாது என ஒவ்வொருத்தரும் நினைக்க வேண்டும். 3-ம் இடத்துக்கு செல்லாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 15 ஆயிரம் களப்பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நிலைமை தீவிரமான பிறகு சிகிச்சைக்கு வருபவர்களே உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் 90,824 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். மருத்துவ உபகரணங்களை அதிகமாக வாங்கி வருகிறோம். இவ்வாறு சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து