சிங்கப்பூரில் ஜூன் 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2020      உலகம்
singapore-2020 04 21

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிங்கப்பூரில் ஜூன் 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை ஒருசேர கொரோனா பாதிப்பு உலுக்கி வருகிறது. கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்காததால், சமூக இடைவெளியை  மக்கள் பின்பற்றுமாறு அனைத்து நாடுகளும் கோரி வருகின்றன. இதனால், கொரோனா வைரஸ் தீவிரமாக உள்ள பல்வேறு நாடுகளில்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்தியாவிலும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில்,  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிங்கப்பூரில்  ஜூன் 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே மே 4-ம் தேதி வரை ஊரடங்கு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில், மேலும் 4 வாரங்களை நீட்டித்து அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து