உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியது

செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2020      உலகம்
corona -2020 04 16

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டி உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோர தண்டவம் ஆடும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.  உலக அளவில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது.  கொரோனாவுக்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால், சமூக விலகலை  பின்பற்றுவதன் மூலமே கொரோனா தொற்று சங்கிலியை உடைக்க முடியும் என்று வல்லுநர்கள் தரப்பில் கூறப்படுகிறது.  இதனால், இந்தியா உள்பட பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்த நிலையில், உலக அளவில்  கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரு லட்சத்து 71 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.  6 லட்சத்துக்கு 58 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து