முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகில் பட்டினியால் வாடும் 26.5 கோடி பேர்: ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை

புதன்கிழமை, 22 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

கொரோனா பாதிப்பால் உணவு பாதுகாப்பின்மையால் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 26 கோடியே 50 லட்சமாக அதிகரிக்கும் என்று ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனாவால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம், உணவு பிரச்சினை ஆகியவை குறித்து ஐ.நா. உலக உணவு திட்டம்,நேற்று முன்தினம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா பரவலுக்கு முன்பே, 2019-ம் ஆண்டு, உணவு பாதுகாப்பின்மையால் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 13 கோடியே 50 லட்சமாக இருந்தது. இந்த எண்ணிக்கை, கொரோனா பாதிப்பால், நடப்பாண்டில் இரட்டிப்பாக உயரும். அதாவது, 26 கோடியே 50 லட்சமாக அதிகரிக்கும் என்று எச்சரிக்கிறோம். 50 நாடுகளில், உணவு பிரச்சினையில் சிக்கி தவிப்போர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட தலா 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு மோதல்கள், பொருளாதார அதிர்வு, வறட்சி போன்ற வானிலை அம்சங்கள் காரணங்களாக இருக்கலாம். பொருளாதார பாதிப்பு அதிகரித்தால், இன்னும் 18 கோடி பேர், பட்டினி நிலைக்கு தள்ளப்படுவார்கள். இத்தகைய நிலைமையை தவிர்க்க எல்லோரும் கூட்டாக பாடுபட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து