முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வுகானில் இருந்து கொரோனா வைரஸ் பரவியுள்ளதற்கான ஆதாரம் உள்ளது : அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 1 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : சீனாவின் வுகான் நகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் தான் கொரோனா உருவாக்கப்பட்டுள்ளது என்பதற்கான போதிய ஆதாரம் உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.  சீனாவில் உள்ள ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவை குறிவைத்தே கொரோனா வைரஸ் வுகான் நகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸ் தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்திதார். அப்போது, 

வுகான் நகரில் உள்ள வைராலஜி நிறுவனத்தில் இருந்துதான் கொரோனா பரவி இருக்கிறது என்பதற்கான ஆதாரம் உள்ளதா? என்று  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த அதிபர் டிரம்ப், ‘ஆம்,  கொரோனா வுகான் ஆய்வுக்கூடத்தில்  உருவாக்கப்பட்டுள்ளதற்கான போதிய ஆதாரம் உள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து, எப்படி இவ்வாறு உறுதியாக கூறுகிறீர்கள் என செய்தியாளர்கள் மீண்டும் பதில் கேள்வி எழுப்பினர். அதற்கு உடனடியாக, 'அந்த விவரத்தை உங்களிடம் தற்போது கூற முடியாது என மறுத்து விட்டார்.மேலும், இந்த விவகாரத்தில் சீனா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க உள்ளதாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து