முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரடங்கின்போது கவச உடையில் நடமாடும் மர்ம மனிதரால் பீதி: இங்கிலாந்து போலீசார் தேடுதல் வேட்டை

வெள்ளிக்கிழமை, 1 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : இங்கிலாந்து நாட்டின் நார்விச் நகரில் ஊரடங்கின்போது பட்டப்பகலில் அச்சுறுத்தும் கவச உடையில் நடமாடும் மர்ம மனிதரால் பொதுமக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் நார்விச் நகரின் கெல்ஸ்டன் பகுதியில் உள்ள தெருக்களில் கடந்த சில வாரங்களாகவே தலை முதல் கால் வரை உடலை முழுமையாக மறைக்கும் விதமாக நீண்ட கருப்பு நிற அங்கி, தொப்பி, பூட்சுடன் ஒரு மர்ம மனிதர் நடமாடி வருகிறார். ஏற்கனவே, கொரோனா வைரஸ் பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வீடுகளுக்குள் வாரக்கணக்கில் முடங்கிக் கிடக்கும் நார்விச் நகர மக்கள் இதைக்கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், அந்த மர்ம மனிதரின் உருவத்தை படமெடுத்து ஜேட் என்ற பெண் சமூகவலைத் தளங்களிலும் பகிர்ந்துள்ளார். அந்த மனிதர் அணிந்துள்ள அங்கி 17-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பிளேக் நோய் பரவியபோது மருத்துவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக அணிந்த அங்கி, தொப்பி, பூட்ஸ், கூம்பு முக கவசம் போல இருப்பது தெரியவந்துள்ளது.  இது குறித்து போலீசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது

இதைத்தொடர்ந்து நார்விச் போலீசார் கருப்பு அங்கி, தொப்பி, பூட்ஸ் சகிதமாக உலா வரும் அந்த மர்ம மனிதரை வலைவீசி தேடி வருகின்றனர். இதுவரை அந்த மர்ம நபர் அப்பகுதியில் எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபட்டதாக தெரியவில்லை. எனினும் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் போலீசார் அவரை தேடிப்பிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த மர்ம மனிதர் கொரோனா பரவல் காரணமாக தனது பாதுகாப்பிற்காக இப்படி உடை அணிந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து