முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் இம்மாதம் இறுதி வரை ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு : பிரதமர் ஷின்சோ அபே சூசக தகவல்

வெள்ளிக்கிழமை, 1 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

டோக்கியோ : ஜப்பானில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இம்மாதம் இறுதிவரை ஊரடங்கை நீட்டிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறும் போது, கொரோனா பிடியிலிருந்து விலகி ஜப்பான் மே 7-ம் தேதி இயல்பு நிலைக்கு வருவது கடினமானது. வைரஸுக்கு எதிராகப் போராடத் தயாராக வேண்டும். ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறேன். மாகாண அரசுகளும் இதற்கு தயாராக வேண்டும். ஊரடங்கை நீடிப்பது குறித்து 6-ம் தேதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

ஏப்ரல் 16-ம் தேதி முதல் ஜப்பானில் 47 மாகாணங்களில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது பிரதமர் ஷின்சோ அபேவும் மே 7-ல் ஜப்பான் இயல்பு நிலைக்குத் திரும்புவது கடினம் என்று கூறியுள்ளதால் ஊரடங்கு நீட்டிப்பையே அவர் சூசகமாகக் கூறுவதாக ஊடகங்கள் கணிக்கின்றன. ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து