முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் குண்டு மழை பொழிந்த வடகொரியாவுக்கு பதிலடி கொடுத்த தென்கொரியா

ஞாயிற்றுக்கிழமை, 3 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

பியாங்கியாங் : வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் 20 நாட்களுக்குப்பின் பொதுவெளியில் தோன்றிய நிலையில், கொரிய எல்லையில் குண்டுமழை பொழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையிலான நட்புணர்வு பெரும்பாலும் நன்றாக இருந்ததில்லை. வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தும் போது தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு, எல்லையில் ராணுவ விமானங்களை பறக்க விட்டு வடகொரியாவை அச்சுறுத்தும். ஆனால் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக இரு நாடுகளுக்கும் இடையில் மிகப் பெரிய அளவில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதில்லை. இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தையில் கூட ஈடுபட்டனர். 

இந்நிலையில் நேற்று கொரிய எல்லையில் வடகொரியா வீரர்கள் குண்டுமழை பொழிந்தனர். துப்பாக்கியாலும், சிறிய வகை பீரங்கியாலும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத வடகொரியா, பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த 20 நாட்களுக்கு மேலாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல் வெளியானது. அந்த நிலையில்தான் நேற்று முன்தினம் பொதுவெளியில் தோன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவர் பொதுவெளியில் தோன்றிய அடுத்த நாளில் வடகொரியா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து