முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம்: ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மே. வங்க அரசுக்கு ரூ.1,000 கோடி : பிரதமர் மோடி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 22 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநில அரசுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் துணை நிற்கும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். 

முன்னதாக மேற்கு வங்கத்தில் அம்பன் புயலின் கோர தாண்டவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் நேரில் ஆய்வு செய்தார். புயல் சேதங்களை பார்வையிட்ட பின், பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் மம்தாவுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் பிரதமர் மோடி கூறியதாவது,

கடந்த ஆண்டு மே மாதத்தில், நாடு மக்களவை தேர்தல்களில் மும்முரமாக இருந்தது, அந்த நேரத்தில் நாங்கள் ஒடிசாவைத் தாக்கிய ஒரு சூறாவளியை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. இப்போது, ஒரு வருடம் கழித்து, ஆம்பன் புயல், நமது கடலோர பகுதிகளை பாதித்துள்ளது. ஆம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் பெரும் பேரழிவு ஏற்பட்டு உள்ளது. புயல் சேதங்களை சீரமைக்க மேற்கு வங்கத்திற்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும்.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுக்கு, இந்த கடினமான காலங்களில் முழு நாடும் உங்களுடன் துணை நிற்கும் என்பதை நான் உறுதியளிக்கிறேன். ஆம்பன் புயலால் சேதமடைந்த மேற்கு வங்கத்தை புனரமைக்க ரூ.1000 கோடி நிதியுதவி வழங்கப்படும். புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரண நிதி வழங்கப்படும். தற்போதைய நெருக்கடியான சூழலில் மேற்கு வங்க அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். ஆம்பன் புயலால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தற்போதைய நிலைமை குறித்து விரிவான கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசால் ஒரு குழு மேற்கு வங்கத்திற்கு அனுப்பப்படும். 

கொரோனாவுடன் போராடுவதற்கு சமூக இடைவெளி அவசியமான ஒன்றாகும், அதேசமயம் ஆம்பன் புயலை எதிர்க்கொள்ள  மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. இந்த முரண்பாடுகள் இருந்த போதிலும், மம்தா ஜி தலைமையில் மேற்கு வங்க அரசு நன்றாக போராடியது. இந்த பாதகமான காலங்களில் நாங்கள் அவர்களுடன் துணை இருக்கிறோம் என்று தெரிவித்தார். 

முன்னதாக மேற்கு வங்க மாநிலத்தில் ஆம்பன் புயலின் பாதிப்புகளைப் பார்வையிட பிரதமர் மோடி நேற்று காலை கொல்கத்தா சென்றார். கொல்கத்தா விமான நிலையத்தில் மேற்கு வங்க கவர்னர் ஜெக்தீப் தன்கர்,  முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். அதன்பின் முதல்வர் மம்தாவுடன் சேர்ந்து, புயல் பாதிப்பு பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி பார்வையிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து