முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடன் தவணைகளை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம் : ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 22 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : வங்கிக்கடன் தவணைகளை செலுத்துவதற்கு கூடுதலாக 3 மாத காலம் அவகாசம் வழங்கப்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார்.

கொரோனாவால் நிலைகுலைந்துள்ள இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும் ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார திட்டங்களை மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். குறிப்பாக தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுக்கான புதிய கடன்கள், புலம்பெயர் தொழிலாளர் பாதுகாப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. பல முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பங்களிப்பு அளிக்கப்படும் என்று நிதி அமைச்சர்  குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வரி வசூலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 17 சதவீதமாக குறைந்துள்ளது. உற்பத்தி நடவடிக்கைகள் 21 சதவீதமாக குறைந்துள்ளது. முக்கிய தொழில் நிறுவனங்களின் உற்பத்தி 6.5 சதவீத அளவிற்கு சரிந்துள்ளது.வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டிருக்கும் சமயத்திலும், உணவு தானிய உற்பத்தி 3.7 சதவீதம் அதிகரித்திருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

2020-21 நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் அந்நிய செலாவணி இருப்பு 9.2 பில்லியன் அதிகரித்துள்ளது. மே 15 வரை, அந்நிய செலாவணி இருப்பு 487 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்மறையான அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, நிதியாண்டின் இரண்டாம் பாதியில் சில முன்னேற்றம் இருக்கும்.

வங்கிக்கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக மூன்று மாத அவகாசம் (ஆகஸ்ட் 31-ம் தேதி வரை) வழங்கப்படுகிறது. மேலும் 3 மாதங்களுக்கு சிறு தொழில் கடன் வழங்கவும் ஏப்றாடுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரம் 13 முதல்  32 சதவீத வரையிலான அளவிற்கு சுருங்கக்கூடும். மானாவாரி சாகுபடியின் பரப்பளவு 44 சதவீதம் உயர்ந்துள்ளது.  தொழில்துறை உற்பத்தி மார்ச் மாதத்தில் 17 சதவீதம் குறைந்துள்ளது. அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை உயரலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. 

உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும். மத்திய அரசின் வரிவசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேளாண்துறை வளர்ச்சியடைந்து வருவது நம்பிக்கையளிக்கும் விதமாக உள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 0.40 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகளில் கடன் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து