முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6088 பேருக்கு கொரோனா பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 22 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 118447 ஆக உயர்ந்துள்ள நிலையில், 3583 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 118447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6088 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 148 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3583 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 48534 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 3234 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 41642 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1454 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 12905 பேருக்கும், டெல்லியில் 11659 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து