திருமழிசையில் புதிய பஸ் முனைய பணிகள் குறித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 22 மே 2020      தமிழகம்
OPS 2020 05 22

Source: provided

சென்னை : திருமழிசையில் கட்டப்பட உள்ள புதிய பஸ் முனைய பணிகள் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னையை அடுத்த திருமழிசையில் புதிய பஸ் முனையம் கட்டப்பட உள்ளது. இந்த புதிய பஸ் முனையத்திற்கான திட்டப் பணிகள் மற்றும் வடிவமைப்பு குறித்த ஆய்வு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் த.கார்த்திகேயன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் முருகேஷ் மற்றும் திருமழிசையில் கட்டப்பட உள்ள புதிய பஸ் முனையத்திற்கான திட்டம் மற்றும் வடிவமைப்பு திட்ட ஆலோசகர் நாராயண ராவ் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பஸ் முனைய பணிகள் தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை துரிதப்படுத்துமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து