Idhayam Matrimony

ஆரோக்கியம் போச்சுன்னா! வாழ்க்கையே போச்சு: நடிகர் ரஜினிகாந்த்

செவ்வாய்க்கிழமை, 9 ஜூன் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு என்று கொரோனா குறித்து தொண்டர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. இருப்பினும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், நடிகர் ரஜனிகாந்த் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இடைவிடாமல் தங்களது உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள்  மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது மனமாந்த பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

அடிபட்ட உடனேயே அதிக வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத் தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போல  தெரிகிறது. இதனுடைய வலி வருங்காலத்தில் பல விதங்களில் நமக்குப் பல கடுமையான வேதனைகளை தரும்.

உங்களது குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களை பாதுகாப்பதுதான் உங்களது அடிப்படை கடமை. எந்த சூழலிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக்கவசத்தை அணியாமலும் இருக்காதீர்கள்.  ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து