முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை

புதன்கிழமை, 24 ஜூன் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான பயிற்சியை தொடங்க இருக்கும் இங்கிலாந்து வீரர்களுக்கு 2-வது முறையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் உள்ளன.  இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 3 மாதங்களுக்க்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக  இங்கிலாந்து சென்றுள்ளது. இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி  அடுத்த மாதம் (ஜூலை) 8-ம் தேதி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் தொடங்குகிறது. ஜூலை 28-ம் தேதியுடன் இந்த டெஸ்ட் தொடர் முடிகிறது.  

இந்த டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து வீரர்களின் முழுமையான பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது. இதையொட்டி இங்கிலாந்து வீரர்களுக்கு 2-வது கட்டமாக  மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. வீரர்கள், ஊழியர்கள் என 30 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 10 தினங்களுக்கு முன்பு இங்கிலாந்து வீரர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் யாருக்கும் கொரோனா  இல்லை என்பது கண்டறியப்பட்டது.

டெஸ்ட் தொடருக்கு முன்பு இங்கிலாந்து வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவார்கள். இதற்கிடையே இங்கிலாந்து சென்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் தனிமைக்காலம் முடிவடைந்தது. இதையொட்டி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.  டேரன் பிராவோ, ஹெட் மையர், கீமோ பால் ஆகியோர் கொரோனா வைரசுக்கு பயந்து இங்கிலாந்து செல்ல  மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து