முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்புடன் பேச்சு நடத்த தயார்: வெனிசுலா அதிபர்

புதன்கிழமை, 24 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

கராக்கஸ் : டிரம்புடன் மரியாதைக்குரிய பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.

எண்ணெய் வளமிக்க தென்அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடியும் அரசியல் குழப்பமும் நிலவி வருகிறது. அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவின் ஆட்சிக்கு தொடர்ந்து நெருக்கடிகள் வலுத்து வருகின்றன. வெனிசுலாவின் நாடாளுமன்றத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ, தன்னை இடைக்கால அதிபராக பிரகடனம் செய்து கொண்டுள்ளார்.

தனது நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு அமெரிக்காவே முழு காரணம் என அதிபர் நிக்கோலஸ் மதுரோ தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மேலும் இந்த விவகாரத்தில் அவர் அதிபர் டிரம்பை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

அண்மையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த டிரம்ப், நிக்கோலஸ் மதுரோ அதிபர் பதவியில் இருந்து விலகுவது குறித்து மட்டுமே அவருடன் நான் பேச்சுவார்த்தை நடத்துவேன் என கூறினார். இந்த நிலையில் தேவையேற்பட்டால் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அதே சமயம் அந்தப் பேச்சுவார்த்தை மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும் எனவும் நிகோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து